தமிழ்நாடு

95 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

95 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

webteam

எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டது என எண்ணூர் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் மாசடைந்த கடற்கரை பகுதிகளை முதலமைச்சர் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எண்ணெய் படலம் படிந்துள்ள பகுதிகளில் மீன்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடலில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் 1800 பேர் ஈடுபட்டுள்ளனர். 95 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன என்றார். மேலும், மத்திய அரசுடன் இணைந்து எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.