தமிழ்நாடு

தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு

கலிலுல்லா

தமிழகத்திற்கு ஒன்றிய அரசு 90ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு யூரியா ஒதுக்கீடு செய்யக்கோரி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த நிலையில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

90ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வர உள்ளது என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காரைக்காலில் உள்ள 4,000 மெட்ரிக் டன் யூரியா ரயிலில் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.