இந்தியாவில் ஸ்ரீ நகரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை Nர் 44 என்பது 4 ஆயிரத்து 113 கிலோமீட்டர் நீளம் கொண்ட மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை. இந்த தேசிய நெடுஞ்சாலை 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கடந்து பயணம் செய்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி, எட்டூர் வட்டம் சுங்கச்சாவடி, சாலைப்புதூர் சுங்கச்சாவடி, நாங்குநேரி சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன.
இந்த சாலையில் மதுரை அருகே அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவுகிறது. ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையே குறைந்தபட்சம் 60 கி.மீ. மேல் இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், 52 கிலோமீட்டர் இடைவெளியில் இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த நான்கு சுங்கச் சாவடிகளுக்கு இடைப்பட்ட 243.5 கிலோமீட்டர் தொலைவில் பயணம் செய்யும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்துகள் 276 கோடி ரூபாய் பாக்கி வைத்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஜூலை 9ஆம் தேதி நள்ளிரவு முதல் அரசு பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தற்போது புதிய தலைமுறைக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை மதுரை கப்பலூர் உட்பட இந்தியா முழுவதும் ஒன்பது சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவதாக நினைக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 2019 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி ஒப்பந்தம் பெற்றுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த கியூப் நெடுஞ்சாலை நிறுவனம், (ஊரடிந ஆழடிடைவைல ஐnஎநளவஅநவெள Pவந டுவன) என்ற இந்த நிறுவனம், அதிகபட்சமாக 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்து, கிளை நிறுவனங்கள் மூலம் இந்த ;சுங்கச்சாவடிகளை பராமரித்து வருகிறது.
ஏற்கனவே இந்தியா முழுவதும் 19 தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளை சிங்கப்பூர் நிறுவனம் பராமரித்து வருவதும் ஆர்டிஐ மூலம் புதிய தலைமுறை பெற்றத் தகவல்களில் தெரியவந்துள்ளது. அதேபோல, கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து, சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு, தமிழக சட்டமன்றத்திலேயே இதுகுறித்து பேசப்பட்ட நிலையில் இந்த சுங்கச்சாவடி இடமாற்றம் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக கடிதங்கள் கோரிக்கைகள் வைக்கப் பட்டதா என்று சில தினங்களுக்கு முன்பு கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி ஒரு எந்த பரிந்துரையும் வரவில்லை என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆர்டிஐ மூலம் பதில் அளித்திருந்தது.