பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 9 லட்சம் மக்கள் பயணம் செய்துள்ளனர். இதனால் போக்குவரத்து துறை 2800 கூடுதல் பேருந்துகளை இயக்கியுள்ளது. மறைமலைநகர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை வாகன நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அதிகளவில் மக்கள் படையெடுத்துள்ளனர்.
புதன் கிழமை மாலை மறைமலைநகர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 2800 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுவரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் மூலமாக 9 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் சொந்தஊர்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.