ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னையில் 9 அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக தியாகராய நகர் உள்ளதால், அங்கு வாகன நிறுத்துமிடம் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் வாகன நிறுத்த கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரூ.36 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில், கட்டவுள்ள வாகன நிறுத்தத்திற்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 9 தளங்கள் கொண்டதாக அமைக்கப்படும் இந்த வாகன நிறுத்தத்தில், 800 வாகனங்கள் வரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுமுற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில்துறை அமைச்சர்பெ ன்ஜமின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.