தமிழ்நாடு

வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்

வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்

webteam

கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் இருந்து ஒன்பதரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாகனத் தகுதிச் சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கையும் களவுமாக பிடிபட்டார். பாபு மற்றும் அவரது பினாமியான செந்தில்குமார் ஆகியோரை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இருவர் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் 30 லட்சம் ரூபாய் பணம், 140 சவரன் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்கு ஆவணங்கள் மற்றும் லாக்கர் சாவிகள் கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில் பாபுவுக்கு சொந்தமான 2 வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிலிருந்து ஒன்பதரை கிலோ தங்கம் மற்றும் 21 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாபுவுக்கு சொந்தமான மேலும் 4 லாக்கர்களில் விரைவில் சோதனை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.