காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். 30 ஆண்டுகள் பழமையான இந்த வீட்டின் மேற்கூரை இன்று காலை 6.30 மணியளவில் திடீரென பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இவர்களில் தட்சிணாமூர்த்தி, அவரது மனைவி அபிதா, மகன் பிரவீண் ஆகியோர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தட்சிணாமூர்த்தியின் 8 வயது மகள் காவியா இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.