வ.உ.சிதம்பரனார் 81 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் ராஜலெட்சுமி
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.
இதனையொட்டி நெல்லை வ.உ.சி.மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை
செய்தனர்.
தமிழக அரசு சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு
அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.