தமிழ்நாடு

காதலர் தினத்துக்கு ஏற்றுமதியின்றி வாடிய ஓசூர் ரோஜாக்கள்: வருத்தத்தில் விவசாயிகள்

Sinekadhara

காதலர் தினத்திற்கு 80% ஓசூர் ரோஜாக்கள் ஏற்றுமதி இன்றி வாடியதால் மாநில அரசு விவசாயிகளின் நலன் கருதி கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்பகுதி ரோஜா மலர் உற்பத்திக்கு பிரசித்திபெற்ற பகுதியாகும். காரணம் இங்கு ரோஜா உற்பத்திக்கு ஏற்ற வகையில் நல்ல சீதோசன நிலை நிலவுகிறது. ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய பகுதிகளில் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக ஓசூர் பகுதியில்தான் மொத்த உற்பத்தியில் 50 சதவீதம் ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. ரோஜா சாகுபடியாளர்கள் பல லட்சம் செலவில் பசுமை குடில்கள் அமைத்து இங்கு ரோஜா மலர்களை உற்பத்தி செய்துவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயிகள், ஆண், பெண் தொழிலாளர்கள், ரோஜாமலர் கொள்முதல் செய்வோர், மலர் வியாபாரிகள் என இரண்டு லட்சம்பேர் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் தாஜ்மஹால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பெர்னியார், கார்வெட், டிராபிக்கள், அமேசான் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் - புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டும் அதிக அளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டதால், சாகுபடியை விவசாயிகள் நிறுத்தினர். அந்தநிலை மாறி, மெல்லமெல்ல ரோஜா சாகுபடியை மீண்டும் துவங்கினர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை குறிவைத்து, தாஜ்மகால், அவலாஞ்சி உள்ளிட்ட பல்வேறு வகைகளில், 60 லட்சத்திற்கும் அதிகமான ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு வரும் 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏற்றுமதி ரோஜாக்களை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈட்டுப்பட்டு உற்பத்தி செய்துள்ளனர்.

சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு 50 லட்சம், ஐரோப்பிய நாடுகளுக்கு 10 லட்சம் ரோஜாக்களை அனுப்ப விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், இதற்கான ஆர்டர்கள் தற்போது வரையிலும் கிடைக்கவில்லை. இதற்கு காரணமான கொரோனா தொற்று முடிவுக்கு வராததால், ஆர்டர் கிடைக்காமல் பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனாவால், அங்கு செல்லவேண்டிய ரோஜாக்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. மேலும், சரக்கு விமானங்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதால் விமானக்கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதி செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் ஓசூரில் இருந்து ஐய்ரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, 20 சதவீதம் மட்டுமே இந்த ஆண்டு ஏற்றுமதி ஆகியுள்ளது.

எனவே மத்திய மாநில அரசுகள் ரோஜா விவசாயிகளின் நலன் கருதி ரோஜா பூக்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழை அளித்து, சரக்கு விமான கட்டணத்தை குறைத்தால் மட்டுமே, மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு, மகளிர் தினம், மதர்ஸ் தே உள்ளிட்ட நாட்களில் ஓசூரில் இருந்து ரோஜாக்களை ஏற்றுமதி செய்யனைன் தள்ளுபடி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.