தமிழ்நாடு

5 கிமீ தூரம் பின்னோகி நடந்தபடி 8 வயது சிறுவன் செய்த உலக சாதனை!

webteam

ராஜபாளையத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ரட்டன்ஜெய் ராஜா, பின்னோக்கி 5 கிமீ தூரம் நடந்தவாறு பாக்ஸிங் பலகையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான முறை குத்தி `நோபில் உலக சாதனை’ படைத்திருக்கிறார். ஏற்கெனவே கடந்த மாதம் தான் செய்த மற்றொரு சாதனையை, சிறுவன் இன்று தானே முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த தற்காப்பு கலை பயிற்சியாளரான அய்யப்பனிடம், 8 வயது சிறுவன் ரட்டன்ஜெய் ராஜா தற்காப்பு பயிற்சி பெற்று வருகிறார். முன்னதாக பாக்சிங் பலகையில் 4,163 முறை குத்தியபடி பின்னோக்கி 2.7 கிமீ நடந்தவாறு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையை சிறுவன் நிகழ்த்தி உள்ளார்.

தான் செய்த சாதனையை முறியடிக்கும் விதமாக நோபில் உலக சாதனை முயற்சியில் ரட்டன்ஜெய்ராஜா ஈடுபட்ட சிறுவன், அதே பாக்சிங் பலகையில் குத்தியவாறு 5 கிமீ தூரம் பின்னோக்கி நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளான். அப்போது, சுமார் 1 கிமீ தூரம் பின்னோக்கி நடந்து கொண்டிந்த போது மழை குறுக்கிட்டது, முயற்சியை கை விடாமல் 1.04 மணி நேரத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி நடந்து இதற்கு முன் தான் செய்த சாதனையை தானே முறியடித்தார். இந்த ஒரு மணி நேரத்தில் பாக்சிங் பலகையில் 8,130 முறை குத்தி உள்ளதாக நோபில் உலக சாதனை அமைப்பின் தீர்ப்பாளர்கள் பரிசு வழங்கும் மேடையில் அறிவித்தனர்.



சிறுவனுக்கு மதுரை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இன்றைய சாதனைக்கான நோபில் உலக சாதனைக்கான சான்றிதழ்களையும், பதக்கத்தையும் வழங்கி பாராட்டினார்.

இதையும் படியுங்கள் - சபரிமலை: பக்தர்களுக்கு ஸ்டீல் பாட்டிலில் நோய் தடுப்புமருந்து கலந்த தூய குடிநீர் விநியோகம்!