5வது மாடியில் இருந்து விழுந்த 8 மாதக்குழந்தை நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தது
சென்னை சவுகார்பேட்டையில் மிண்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8 மாதக்குழந்தை ஜினிஷா விளையாடிவாறே பால்கனிக்கு வந்துள்ளது. தவழ்ந்து வந்த குழந்தை பால்கனி தடுப்பின் இடைவெளி வழியாக கீழே விழுந்தது. 5 வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை கட்டிடத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையில் விழுந்து பிறகு தரையில் விழுந்துள்ளது. குழந்தை விழுவதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காலிலும் கழுத்திலும் அடிப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சைப்பெற்று வருகிறது. மேலிருந்து விழுந்த குழந்தை நேரடியாக தரையில் விழாமல் ஹோண்டா ஆக்டிவா பைக்கின் இருக்கையில் விழுந்ததால் பெரியதாக அடிபடவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.