தமிழ்நாடு

8 அடி உயரத்தில் பிரம்மாண்ட ‘சாக்லேட் உலகக் கோப்பை’ : பொள்ளாச்சியில் தயாரிப்பு

8 அடி உயரத்தில் பிரம்மாண்ட ‘சாக்லேட் உலகக் கோப்பை’ : பொள்ளாச்சியில் தயாரிப்பு

webteam

இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சியில் 90 கிலோ எடை கொண்ட  சாக்லேட் உலகக்கோப்பை தயாரிக்கப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பை தொடரில் வெற்றிகரமாக விளையாடி வரும் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அத்துடன் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பொள்ளாச்சியில் ஒரு தனியார் ஹோட்டலில் 90 கிலோ சாக்லெட் மூலம் உலகக் கோப்பை தயாரிக்கப்பட்டுள்ளது. 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த சாக்லேட் கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது. எட்டு அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட இந்த சாக்லேட் உலகக் கோப்பை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களாக சாக்லெட் மூலம் ஊழியர்கள் தயாரித்த உலகக் கோப்பையை ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களும், மட்டைப்பந்து ரசிகர்களும் உற்சாகத்துடன் கண்டு ரசிக்கின்றனர். இந்த சாக்லேட் கோப்பை இறுதிப் போட்டி வரை பார்வைக்காக வைக்கப்படும். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வென்றால், சாக்லேட் கோப்பையை ரசிகர்களுக்கே வழங்க ஆலோசிக்கபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.