நீலகிரி பேருந்து விபத்து
நீலகிரி பேருந்து விபத்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

நீலகிரி: 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 8 பேர் உயிரிழப்பு!

Prakash J

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் 54 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே பேருந்து சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தால் குன்னூர் பகுதியில் சுமார் 2 மணிநேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதனிடையே பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.