ஆளுநர் ஆர்.என் ரவி, முதல்வர் ஸ்டாலின் Pt web
தமிழ்நாடு

தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என் ரவி.. மதுரை மாநகர காவல் நிலையத்திற்கு முதல்வர் விருது!

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளா் சிலை அருகே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநா் ஆா்.என். ரவி மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

PT WEB

இந்திய நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவது கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, தமிழக அரசு சாா்பில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளா் சிலை அருகே நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று காலை 8 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து, விமானப்படை மூலம் தேசியக் கொடிக்கு மலர்கள் தூவப்பட்டன. முன்னதாக, இவ்விழாவிற்கு வந்த ஆளுநர் ஆர்.என் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

குடியரசு தின விழா

இதைத் தொடர்ந்து, ஆளுநருக்கு ராணுவம், கப்பற்படை, வான்படை ஆகிய முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மத நல்லிணத்திற்கான கோட்டை அமீர் விருது மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான உயரிய விருதுகள் ஆகியவற்றை ஆளுநர் ஆர்.என் ரவி வழங்கியுள்ளார். அதன்படி, சிறந்த காவல்நிலையத்திற்கான முதல்வர் விருது மதுரை மாநகரம் காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம் காவல்நிலையத்திற்கும், மூன்றாவது பரிசு கோவை காவல்நிலையத்திற்கும் முதல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது. மதநல்லிணக்கத்திற்குகான கோட்டை அமீர் விருது திருப்பூரைச் சேர்ந்த கலிமுல்லா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் முதலானோர் இவ்விழாவில் பங்கேற்றிருக்கின்றனர்.

இதையடுத்து, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சாதனை விளக்க கண்காட்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வரும் நிலையில், அதைத் தொடர்ந்து இவ்விழா நிறைவு பெறும்.