தமிழ்நாடு

மூன்று மாதங்களில் 77,000 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து

webteam

த‌மிழகம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக 77 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இதனை தடுக்கும் வகையில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு சட்டங்களில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் சாலையில் விதிமுறைகளை மீறினால் அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் த‌மிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக 77 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வாகனம் ஓட்டிகொண்டே செல்போன் பேசியதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக‌ மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியது மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.