தமிழகத்தில் காலியாக உள்ள 7535 ஆசிரியர் பணியிடங்களுக்கு உத்தேச தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மொத்தம் 7,535 காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தேச திட்ட அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்பது தொடர்பான விவரங்களும் அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, 1915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஆகஸ்ட் மாதத்திலும், 1 205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இணை பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் உள்ளிட்ட 232 இடங்களுக்கு ஏப்ரல் மாதமும், காலியாக உள்ள இணை சட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 132 பணியிடங்களுக்கு மே மாதமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 4000 பணியிடங்களுக்கு ஜூலை மாதமும் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில், முதல்வர்கள் ஆய்வு பணிகளுக்கு (சி.எம்.ஆர்.எப்) 180 மாணவர்கள் பணியிடங்கள் , நவம்பர் மாதத்தில், காலியாக உள்ள முதுகலை உதவி பேராசிரியர்கள் 1915 பணியிடங்கள். டிசம்பர் மாதத்தில், காலியாக உள்ள பி.டி. உதவிஅலுவலர்கள் மற்றும் பி.ஆர்.டி.இ ஆகிய 1205 பணியிடங்கள், மார்ச்-2026 ல் வட்டார கல்வி அலுவலர்களுக்கான 51 பணியிடங்கள் உள்ளிட்ட இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பல்கலைகழகங்கள் தேவைக்கேற்ப பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.