தமிழ்நாடு

742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை

742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை

rajakannan

திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் படிப்பை முடித்த 742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

12-ம் வகுப்பு படிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் 'லெட்டர் பேட்' கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்டப் பட்டத்தை விலை கொடுத்து வாங்குவது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, லெட்டர் பேட் கல்லூரிகளில் சட்டப்படிப்பை முடித்தவர்களின் பள்ளிச் சான்றிதழை சரிபார்த்த பிறகே தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் படிப்பை முடித்த 742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விளக்கம் கேட்கப்பட்டுள்ள நோட்டீஸ் மீது முடிவு எடுக்கும் வரை வழக்கறிஞராக பணி புரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்ப நவம்பர் 9-ம் தேதி நடந்த தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.