சென்னையிலுள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் எஸ்கலேடரிலிருந்து விழுந்து 74வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை எழும்பூர் பகுதியில் ரமேஷ் ஜக்டியானி (74) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக தனியார் ஓட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்குள்ள எஸ்கலேடரில் இவர் ஏற முற்பட்டார். அப்போது இவரும் அவரது நண்பரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அதில் இருவரும் அடிப்பட்டனர். உடனே இவர்கள் இருவரையும் ஓட்டல் நிர்வாகம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ் ஜக்டியானி தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்தார். இவருடைய நண்பர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த ரமேஷ் ஜக்டியானியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.