தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவு - மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவு - மாநில தேர்தல் ஆணையம்

kaleelrahman

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோராயமாக 74.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.36 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 சதவீதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருப்பத்தூரில் 78 சதவீதமும், தென்காசி மாவட்டத்தில் 74 சதவீதமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 சதவீதம் நெல்லை மாவட்டத்தில் 69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.