பிரான்மலை கோவிலில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு pt
தமிழ்நாடு

பிரான்மலை கோவில்| மலைமேல் உள்ள சுனையில் தவறிவிழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

சிவகங்கையில் உள்ள புகழ்பெற்ற பிரான்மலை முருகன் கோவில் செல்லும் வழியில் உள்ள சுனையில் தவறிவிழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PT WEB

பிரான்மலை முருகன் கோவிலில் 7 வயது சிறுவன் சஞ்சித் சுனையில் தவறி விழுந்து உயிரிழந்தார். சாமி தரிசனம் செய்ய வந்த போது, கை, கால்களை கழுவும் போது கால் வழுக்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கம்புணரி அருகே புகழ் பெற்ற பிரான் மலையில் 2563 அடி உயரத்தில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவில் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் வழியில் மலை மேல் இருந்த சுனையில் தவறி விழுந்து மதுரை மாவட்டம் பொட்டப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் சகுந்தலா தம்பதியரின் ஏழு வயது மகன் சஞ்சித் பரிதாபமாக உயிரிழப்பு.. உறவினர்களுடன் கோவிலுக்கு வந்த நிலையில் சிறுவன் சஞ்சித் கை, கால்களை கழுவச் சென்ற போது இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.

பிரான்மலை கோவிலில் சிறுவன உயிரிழப்பு..

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சியில் 2563 அடி உயரத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய மதுரை மாவட்டம் பொட்டப்பட்டியை சேர்ந்த சுரேஷ்-சகுந்தலா தம்பதியர் தங்களுடைய 7 மகன் சஞ்சித் மற்றும் உறவினர்களுடன் வந்துள்ளனர். தாயார் சகுந்தலா நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால் சாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம் என வந்துள்ளனர்.

அப்போது மலையின் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சுனைகள் அருகே இளைப்பாறும் போது, சுனையில் சிறுவன் சஞ்சித் கை, கால்களை கழுவும் போது கால் வழுக்கி சுனையில் தவறி விழுந்ததாக தெரிகிறது. உடன் வந்தவர்கள் சிறுவனை காணவில்லை என்று சுனையில் தேடியபோது சுனையில் சிக்கி இருந்த சிறுவன் சஞ்சித்தை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பிரான்மலை அடிவாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் கொண்டு சென்றனர். அவனை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சதுர்வேதமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தாய் சகுந்தலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிறுவன் சஞ்சத்தின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.