தமிழ்நாடு

தொடரும் டெங்கு காய்ச்சல் மரணங்கள்: இன்று 7 பேர் பலி

தொடரும் டெங்கு காய்ச்சல் மரணங்கள்: இன்று 7 பேர் பலி

webteam

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் இன்று 7 பேர் உயிரிழந்தனர்.

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் காய்ச்சல் காரணமாக தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவர் இன்று உயிரிழந்தார். கீழ்வேளூரை அடுத்துள்ள ஆணைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சுதர்சன். 11ஆம் வகுப்பு படித்துவந்த இவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் டெங்கு அறிகுறி தெரியவந்ததால் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் சுதர்சன் உயிரிழந்தார்.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நரேஷ்குமார் என்ற 9 வயது சிறுவன் இன்று உயிரிழந்தார். தர்மபுரி ராஜா தோப்பு கிராமத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிஹரன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தது. வேதாரண்யம் அருகே நெய் விளக்கை சேர்ந்த 16 வயது சிறுமி அனுசுயா டெங்குக்கு பலியானார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியநேந்தலில் இரண்டரை வயது குழந்தை சிவகுரு காய்ச்சலுக்கு உயிரிழந்தது.