தமிழ்நாடு

கார்- லாரி நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி

கார்- லாரி நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி

webteam

ராஜபாளையம் - தென்காசி இடையேயான சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் தமிழகத்தில் சுற்றுலாவை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தென்காசி நோக்கி சர்க்கரை ஏற்றி வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

படுகாயமடைந்த இரண்டு பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் விபத்து குறித்து ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.