சென்னை கொருக்குப்பேட்டையில் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தடுக்க வந்தவரை வெட்டிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் சகோதரர்கள், நவீன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர். இதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை பழிதீர்க்க நவீன் உள்ளிட்ட 3 பேர் அரிவாளுடன் சென்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்து தப்பிக்க அங்குள்ள உணவு விடுதிக்குள் சென்றனர். தொடர்ந்து இருதரப்பினரும் கத்திகளால் தாக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த கடையின் உரிமையாளர் மணிகண்டன் அவர்களை தடுத்துள்ளார்.
ஆனால் அவருக்கு தலையில் அரிவாள் வெட்டு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் கடையின் உள்ளே வந்து மோதிக்கொண்ட 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற பாம்பு ராஜேந்திரன், வினோத் மற்றும் ராஜேஷ், நவீன், பாலாஜி, சதீஷ்குமார் ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது. ஆர்கே நகர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.