உத்தரப்பிரதேசம் முகநூல்
தமிழ்நாடு

உத்தரப்பிரதேசம்: வேகத்தடையால் 15 நிமிடங்களில் ஏற்பட்ட 7 விபத்துக்கள்... வெளியான அதிர்ச்சி வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால், 15 நிமிடங்களில் 7 விபத்துக்கள் நடந்துள்ளன என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசத்தில் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால், 15 நிமிடங்களில் 7 விபத்துக்கள் நடந்துள்ளன என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் டேராடூனில் உள்ள வேகத்தடை ஒன்று, கடந்த சில நாட்களாகவே அனைவரின் கவனத்தையும் பெற்றுவருகிறது. காரணம், முறையற்று கட்டப்பட்டிருக்கும் இந்த வேகத்தடையில் பயணிக்கும் கார்கள், பைக்குகள் காற்றில் பறக்கின்றன. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

டேராடூனில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பகுதியில் உள்ள கடிகார் கோபுரத்தின் அருகே உள்ள இந்த வேகத்தடை காரணமாக, தினசரி ஏராளமான விபத்துக்கள் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அப்படி, நேற்று இரவில் 15 நிமிடங்களில் மட்டும் இந்த வேகத்தடையால் ஏழு விபத்துகள் நடந்திருப்பதாகவும் அதில் ஒரு குழந்தை காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கரிமா மெஹ்ரா தசௌனி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இதுதான் மாநில அரசின் நிலை. சாலை விபத்துகள் அதிகரித்து வருவதைக் கண்டு அரசும் நிர்வாகமும் பல்வேறு இடங்களில் ஸ்பீட் பிரேக்கர், ஜீப்ரா கிராசிங்குகள் (zebra-crossings) அமைக்க முயற்சி எடுக்கிறதுதான். ஆனால் அவை முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. உணர்வின்மை மற்றும் அலட்சியத்தின் உச்சத்தால் ஸ்பீட் பிரேக்கர்ஸ் மலைகளை போல் உருவாக்கப்படுகின்றன. இதனால், 15 - 30 நிமிடங்களில் ஏழு விபத்துக்கள் பதிவாகியுள்ளன. ஒருகுழந்தையும் படுகாயம் அடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அக்டோபர் மாதத்தில் குருகிராம் பகுதியில் புதிதாக போடப்பட்ட வேகத்தடையில் சென்ற கார் பறக்கும்காட்சிகள் வைரலான நிலையில், தற்போது இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.