தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இன்று 4,264 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. 1,02,721 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இதுவரை 58,378 பேர் கொரோனா நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 64 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனைகளில் இருந்து 42 பேரும், தனியார் மருத்துவமனைகளில் இருந்து 22 பேரும் இறந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 2082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 996 பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இணை நோய் இல்லாத 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு சதவிதம் 1.34 ஆக உள்ளது.