தமிழ்நாடு

திருவள்ளூரில் ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா

திருவள்ளூரில் ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா

webteam

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும் அதிகப்படியான எண்ணிக்கையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கொரோனா வைரசால் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு காவலரும் அடங்குவார். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.