ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்தது. கடைசி நாளான இன்று வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட 8 சுயேட்சை வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 62ஆனது. இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வாக்குப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.