தமிழ்நாடு

இன்னும் 619 மீனவர்களை காணோம்..!

இன்னும் 619 மீனவர்களை காணோம்..!

rajakannan

ஒகி புயலால் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 619 மீனவர்களை இன்னும் காணவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நவம்பர் 30-ம் தேதி குமரி மாவட்டத்தை ஒகி புயல் உலுக்கியது. இந்தப் புயலின் தாக்கத்தால், மீனவ மக்கள் பெரும் சேதத்தைச் சந்தித்த நிலையில், ஏராளமான மீனவர்கள் கடலிலிருந்து திரும்பி வராததால் அவர்களின் நிலைமை குறித்து உறவினர்கள் கவலையில் உள்ளனர். கடலில் தத்தளிக்கும் தங்களின் உறவினர்களை மீட்கக் கோரியும், குமரி மாவட்டத்தைத் தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும் பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒகி புயலால் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 619 மீனவர்களை இன்னும் காணவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 433 பேரும், கேரளாவைச் சேர்ந்த 186 பேரும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகி புயலால் தமிழகத்தில் 14 மீனவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.