சென்னையில் 4வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரையை அடுத்த ஷெனாய் நகரை சேர்ந்தவர் ஜலாப்புதீன் (வயது 75). இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டில் மற்றொரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தை அடிக்கடி பக்கத்து வீட்டில் உள்ள ஜலாப்புதீனுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று விளையாட வந்த குழந்தையிடம் ஜலாப்புதீன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து அழுதுக்கொண்டே குழந்தை வீட்டிற்கு சென்றுள்ளது. இதனைக்கண்ட பெற்றோர்கள் குழந்தையிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் குழந்தைக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை. அங்கு என்ன நடத்தது என்பதையும் ஜலாப்புதீன் தன்னிடம் எப்படி நடந்துக்கொண்டார் என பெற்றோர்களிடம் சிறுமி கூறியுள்ளார்.
சிறுமி கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுதொடர்பாக அமைந்தக்கரை காவல்நிலையத்தில் புகார் தெர்வித்தனர். பெற்றோரின் புகாரை அடுத்து ஜலாப்புதீனை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.