தமிழ்நாடு

600 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பட்டுக்கோட்டையில் கண்டெடுப்பு

600 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பட்டுக்கோட்டையில் கண்டெடுப்பு

webteam

பட்டுக்கோட்டை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாமி சிலைகள், சூலாயுதம், பீடம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தில் பழமலை நாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆழ்துளை கிணறு தோண்டியபோது சுவாமி சிலைகள் மண்ணுக்குள் புதைத்திருந்தது தெரியவந்தது. சிவன், பார்வதி, பிள்ளையார், நடராஜர், அம்மன், நாயன்மார் சிலைகளும், சூலாயுதம், சிலைகள் வைக்கும் பீடம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. காவல்துறையினர். இந்து சமய அறநிலையத்துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிலைகளை ஆய்வு செய்தனர்.

கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் சுத்தம் செய்து ஆகம விதிகள்படி  பூஜைகள் செய்து அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.  இந்த கோவில் வளாகத்தில் எடுக்கப்பட்ட சிலைகளை இந்த கோவிலுக்கே வழங்க வேண்டும்  என கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.