NCTPS pt desk
தமிழ்நாடு

வடசென்னை அனல் மின் நிலையம்: கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு - 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: எழில் கிருஷ்ணா

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2 நிலைகள் உள்ளன. முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகின்றன.

NCTPS

இந்நிலையில், இரண்டாவது நிலையில் உள்ள இரண்டாவது அலகில் கொதிகலன் பழுது ஏற்பட்டுள்ளது.

இதனால், அங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோளாரை சரிசெய்யும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.