தமிழ்நாடு

சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு

webteam

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் - கவிதா தம்பதியினர். இவர்களுக்கு மகாலட்சுமி என்ற 6 வயது பெண் குழந்தையும், தினேஷ் என்ற 2 வயது ஆண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று உடல் நலம் குன்றிய மகாலட்சுமியை பெற்றோர்கள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அப்போது பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகாலட்சுமி இன்று மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.