செய்தியாளர்: ரமேஷ்
தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (29-1-2025) காலை 11.00 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம், திமுக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற “தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்” பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை- அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட - ஆளுநர்களுக்கு “நடத்தை விதிகள்” (Code of Conduct) உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் (Time Frame) செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக வலியுறுத்தும்!
டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.
5370 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் இருந்துள்ளது என்பதை உலகிற்கு உணர்த்திய தமிழக அரசின் சாதனையை மத்திய அரசும் பிரதமர் மோடியும் முன்னெடுக்க வேண்டும் என்கின்ற தீர்மானம்.
கூட்டாட்சி தத்துவம் மற்றும் மாநில கல்வி உரிமை பறிக்கின்ற வகையில் அமைந்திருக்கும் பல்கலைக்கழக மானிய குழுவின் வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக மாணவர் அணி மற்றும் எம்பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள தீர்மானம்.
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற துடிக்கும் மத்திய அரசை கண்டித்து தீர்மானம்
தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள பாஜக அரசு, இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள் மற்றும் பேரிடருக்கு நிதி ஒதுக்கிடவும் மாநில திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை அறிவித்திடவும் தீர்மானம்.