தமிழ்நாடு

எம்.பி தேர்தல்: தமிழகத்திலிருந்து 6 பேரின் மனுக்கள் ஏற்பு...யார் யார்? முழு விவரம்

Sinekadhara

மாநிலங்களவை தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து மனுத்தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று மாநிலங்களவை வேட்பாளர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. திமுக வேட்பாளர்களான கல்யாண சுந்தரம், கிரி ராஜன், ராஜேஸ்குமார், அதிமுக வேட்பாளர்கள் சி.வி சண்முகம், தர்மர், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவு இல்லாத சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.