Minister Senthil Balaji
Minister Senthil Balaji pt desk
தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு - பேச்சுவார்த்தை முடிவில் ஒப்பந்தம்

PT WEB

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1-12-2019ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் 12வது ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது.

TANGEDCO

இந்த கூட்டத்தில் 19 சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்கெனவே மின்வாரியம் சார்பில் 6% உயர்வும், 20 ஆண்டுகள் பணி முடித்த நபர்களுக்கு கூடுதல் உயர்வும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சங்கங்கள் சார்பில் 10 ஆண்டுகள் முடிந்த நபர்களுக்கு கூடுதல் உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் 6% உயர்வும் 10 ஆண்டுகள் பணி முடிந்து நபர்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் உயர்வும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு ஒப்பந்தம் ஆனது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ''மின் வாரிய ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 01.12.2019-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் ஆறு சதவிகிதம் (6%) ஊதிய உயர்வு வழங்கப்படும். 01.12.2019-ம் நாளன்று, 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக (Service Weightage) 01.12.2019-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவிகிதம் (3%) ஊதிய உயர்வு வழங்கப்படும்.

செந்தில் பாலாஜி

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை 1.12.2019 முதல் 1.4.2022 வரை மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் என கணக்கிட்டு 2 தவணையாகவும், 2.4.2022 முதல் 31.5.2033 வரை இரண்டு தவனையாகவும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது'' என தெரிவித்தார்.

10 வருடங்கள் பணி முடித்த நபர்களுக்கு weightage உயர்வு வழங்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்த நிலையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் வேலைப்பளு குறித்த பேச்சுவார்த்தை பின்னர் நடைபெறும் என தெரிவித்தார். அதேபோல ஊதிய உயர்வு மூலம் மின்சார வாரியத்திற்கு கூடுதலாக 527 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தார். 75,978 நபர்கள் இந்த ஊதிய உயர்வு மூலம் பயன் பெறுவார்கள். மின்வாரியத் துறையில் 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களின் எண்ணிக்கை 62,548 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.