தமிழ்நாடு

மன்னார்குடி பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து - 6 பேர் பலி

மன்னார்குடி பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து - 6 பேர் பலி

webteam

மன்னார்குடி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சிங்காரவேலு என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் கிடங்கு ஒன்று இயங்கி வந்தது.
அங்கு நாட்டு வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. வழக்கம்போல் இன்று காலை சுரேஷ், பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு, வீரப்பன்
ஆகிய 6 பேர் பட்டாசு கிடங்கில் வேலை பார்த்து வந்தனர். அப்போது திடீரென பட்டாசு கிடங்கு வெடித்து சிதறியதில் அந்த கிடங்கு
முழுவதும் தரைமட்டமானது. இதில் வேலைப்பார்த்து கொண்டிருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைந்து
வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்
படுகாயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்குடி போலீசார் இதுகுறித்து வழக்கு
பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தகவல்கள்
தெரிவிக்கின்றன.