தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு: முழு விவரம்.!

jagadeesh

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் 5,870 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 81,793 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,859 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,98,366 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று மட்டும் 965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,748 பேர் உயிரிழந்துள்ளனர்.