வாக்காளர் பட்டியல்  web
தமிழ்நாடு

தமிழ்நாடு | மொத்த வாக்காளர்கள் 5.73 கோடி பேர்.. இறுதிப் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், முடிவை தீர்மானிக்கும் சக்திகளாக இளைஞர்கள் வாக்குகள் இருக்கின்றன.

PT WEB

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எஸ்.ஐ.ஆர் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் துவங்கியது. இதற்கான பணிகள் முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகான தமிழ்நாட்டின் இறுதி வாக்களர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 5.67 கோடி வாக்காளர்கள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தனர். அதேசமயம், விடுபட்ட ஆனால், தகுதியுள்ளவர்கள் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளும் வகையில், சிறப்பு முகாம்களை தேர்தல் ஆணையம் நடத்தியது. இந்தச் சூழலில்தான், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள இறுதி வாக்களர் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

அதன்படி, தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். இது, கடந்த இறுதி வேட்பாளர் பட்டியலைவிட 6 லட்சத்து 35 ஆயிரத்து 911 வாக்காளர்களை கூடுதலாக கொண்டதாக உள்ளது. தற்போதைய புதிய பட்டியலில் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள். 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள். 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.

மொத்த வாக்காளர்களில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 14 லட்சத்து 59 ஆயிரத்து 39 பேர்; 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 1 கோடியே 7 லட்சத்து 18 ஆயிரத்து 457 பேர்; 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 1 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரத்து 490 பேர்; 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் 1 கோடியே 19 லட்சத்து 243 பேர்; 50 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் 1 கோடியே 3 லட்சத்து 83 ஆயிரத்து 934 பேர்; 60 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்கள் 67 லட்சத்து 69 ஆயிரத்து 737 பேர்; 70 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள் 34 லட்சத்து 35 ஆயிரத்து 639 பேர்; 80 முதல் 89 வயதுக்கு உட்பட்டவர்கள் 10 லட்சத்து 62 ஆயிரத்து 752 பேர். இந்த சூழலிலதான், தமிழக சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.