மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை PT
தமிழ்நாடு

57 லட்சம் பேரின் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிப்பு! ஏன்..?

webteam

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இவற்றில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

மனு நிராகரிக்கப்பட்டது பற்றி, வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில், சம்பந்தப்பட்ட மகளிருக்கு அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் கொடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அந்த விளக்கத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் மீண்டும் மனு செய்து தகுதியுடையவர்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும், தகுதியுடைய ஒரு பயனாளி கூட விடுபட மாட்டார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

என்னென்ன காரணங்களுக்காக மனுக்கள் நிராகரிக்கப்பட்டன?

என்னென்ன காரணங்களுக்காக மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள், புதிய தலைமுறைக்கு தெரியவந்துள்ளது. அதன்படி, நிராகரிக்கப்பட்டவற்றில் 3 லட்சம் விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் அரசுப்பணியில் இருக்கும் மகளிர் ஆவர்.

முதல்வர் ஸ்டாலின்

பெரும்பாலான விண்ணப்பங்கள், வருமான வரி செலுத்துவோரின் குடும்பத்தைச் சேர்ந்தோர் என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. சொந்த கார் மற்றும் ஆண்டுக்கு 3,600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களைச் சேர்ந்த மகளிர் பல லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளது கள ஆய்வில் தெரிய வந்ததால் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.