தமிழ்நாடு

கணவரின் மரணத்தை தாக்கிக்கொள்ள முடியாமல் மூதாட்டி தற்கொலை

கணவரின் மரணத்தை தாக்கிக்கொள்ள முடியாமல் மூதாட்டி தற்கொலை

webteam

சென்னையில் கணவர் இறந்த துயரத்தை தாக்கிக்கொள்ள முடியாமல் மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை மடிப்பாக்கம் அடுத்த யசோதா நகர் செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் கணபதி சுப்ரமணி - தேவசேனா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த வயதான தம்பதியினர் தனியாக வசிந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் சுப்ரமணி (60) கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 30) மாரடைப்பால் உயிரிழந்தார். சுப்ரமணியின் மரணத்தை தாங்க முடியாத தேவசேனா 

கணவர் உயிரிழந்து மூன்று நாட்கள் கூட தனிமையில் இருக்க முடியாமல் தனது வீட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.சுப்ரமணியின் இறுதிச்சடங்கிற்கு வந்த உறவினர்கள் தூக்கிய பிறகு தேவசேனா தற்கொலை செய்துள்ளார்.

விடிந்து வெகுநேரமாகி தேவசேனா வீட்டில் இல்லாததை கண்ட உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். எங்கு தேடியும் தேவசேனா கிடைக்காததால் சிலர் எதேட்சையாக கிணற்றில் பார்த்துள்ளனர். தேவசேனா கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுதொடர்பாக மடிப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலதுறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அங்கு உடற்கூறு ஆய்வு முடிந்து அவரது உடல் அடக்கம செய்யப்பட்டது. கணவரின் பிரிவை தாக்கிக்கொள்ள முடியாத தேவசேனா மூன்று நாட்களிலேயே தன்னுயிர் நீத்திருப்பது அப்பகுதி மக்களுக்கும் உறவினர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.