வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், கடந்த 24 மணிநேரத்தில், 29 இடங்களில் அதிகனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 168 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் காவிரி படுகை மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
சென்னையை பொறுத்தவரை வரும் 17, 18 தேதிகளில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து அடுத்த அறிவிப்பில் கூறப்படும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். தற்போது தென்காசி மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்டும், அதனைசுற்றியுள்ள மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.