தமிழ்நாடு

“நவ.13ல் 5000 மருத்துவ முகாம்கள்; நவ.14ல் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்”: அமைச்சர்

“நவ.13ல் 5000 மருத்துவ முகாம்கள்; நவ.14ல் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்”: அமைச்சர்

Sinekadhara

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், ‘’6,115 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில் நேற்று மட்டும் 2,43,139 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். நாளை தமிழகத்தில் 5000 மெகா மருத்துவ முகாம்கள் நடைபெற இருக்கிறது. இதில், சென்னையில் மட்டுமே 750 மருத்துவமுகாம்கள் நடைபெறவுள்ளது. மேலும், மழைக்கால நோய்த்தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்த அறிகுறிகள் இருந்தாலும் முகாமில் பங்கேற்று சிகிச்சை பெறலாம். வரும் ஞாயிற்றுக்கிழமையும் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

மேலும், திமுக அரசு பொறுப்பேற்றபின் கோவை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை 9150 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 493 பேர் டெங்குவுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்’’ என்று கூறினார்..