தமிழ்நாடு

என்எல்சி-யில் பணி நாட்களை நீட்டித்துத் தரக்கோரி போராட்டம்; 500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது

என்எல்சி-யில் பணி நாட்களை நீட்டித்துத் தரக்கோரி போராட்டம்; 500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது

webteam

நெய்வேலி என்.எல்.சி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள், வாயில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 26 நாட்கள் பணி வழங்கப்பட்ட நிலையில், அதை 19 நாட்களாக நிர்வாகம் குறைத்துள்ளதாக கூறி கடந்த 12ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பணி நாட்களை நீட்டித்துத்தர வேண்டி இன்று காலை முதலாவது சுரங்க விரிவாக்க நுழைவு வாயில் முன்பு அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்‌டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.