திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பெயிண்ட் கடையின் மேற்கூரை வழியாக உள்ளே குதித்த நபர் ஒருவர், சிசிடிவி கேமராக்களை வேறு பக்கம் திருப்பி வைத்துவிட்டு கொள்ளை அடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே காந்திநகர் ஆலமரம் பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வருபவர் கிருஷ்ணன். இவர் தனது கடையின் கல்லாவில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து சோழவரம் காவல்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்து கொள்ளையனை பிடிக்க முயறிசித்தனர்.
ஆனால் அதில் அதிர்ச்சி தரும் சம்பவம் காத்திருந்தது. கொள்ளையன் சிசிடிவியில் சிக்காமல் இருக்க கடையின் மேற்கூரை வழியாக புகுந்து கேமராவை வேறு பக்கம் திருப்பினார். பின்னர், கொள்ளை அடித்துவிட்டு, பின்பு பழைய மாதிரியே கேமராவை வைத்துச் சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து காவல்துறையினர் கொள்ளையனை தேடி வருகின்றனர்.