தமிழ்நாடு

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்

webteam

வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம் காட்டியதாக தற்காலிக பணியாளர்கள் 50 பேரை பணி நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக 1936  பேர் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இந்நிலையில் கொசு ஒழிப்பு பணியில் சரிவர ஈடுபடாத பணியாளர்கள் கண்டறியப்பட்டு மாவட்டம் முழுவதும் 50 தற்காலிக பணியாளர்களை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். மேலும் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சரியாக செயல்படாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.