தமிழ்நாடு

ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மெட்ரோவில் கட்டணச் சலுகை..?

Rasus

ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு அன்று 50 சதவீத கட்டண சலுகையை அளிக்க சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது.

விரைவான போக்குவரத்திற்காகவும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. வார நாட்களில் சென்னை மெட்ரோவில் நாள் ஒன்றுக்கு 1.15- 1.20 லட்சம் பயணிகள் பயணம் செய்யும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையில் 60,000-70,000 பேர் மட்டுமே பயணம் செய்வதாக தெரிகிறது.

இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க 50 சதவீத கட்டணச் சலுகையை அளிக்க சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமில்லாமல் பொது விடுமுறையை நாட்களிலும் இந்த கட்டணச் சலுகையை அறிவிக்கலாமா என்ற சந்தேகத்திலும் சென்னை மெட்ரோ உள்ளது. ஒரு சில மாதங்கள் முதல் ஒருவருடம் வரை இந்த முறையை பின்பற்றலாம் என்ற திட்டத்திலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உள்ளது. இதுகுறித்து முழுமையான ஆராய்ந்த பின்னர் கட்டணச் சலுகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.