இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்றும் நாளையும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் யுகாதியும், நாளை தமிழ் புத்தாண்டும் கொண்டாடப்படுவதால், இந்த 2 தினங்களும் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.