5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது web
தமிழ்நாடு

பத்ம விருதுகள்| தமிழர்கள் 5 பேருக்கு பத்மஸ்ரீ விருது! யார் யார்?

மூத்த விஞ்ஞானி புண்ணியமூர்த்தி, ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் உட்பட சேலம், திருவாரூர், நீலகிரியைச் சேர்ந்த 5 தமிழகர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

Rishan Vengai

2026 குடியரசு தினத்தை முன்னிட்டு 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது..

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி மத்திய அரசால் அறிவிக்கப்படும். அவை, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

பத்ம விருதுகள்

அந்த வகையில் 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதில்

1.மூத்த விஞ்ஞானி புண்ணியமூர்த்தி,

2.ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன்,

3.நீலகிரியைச் சேர்ந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன்,

4.சேலத்தை சேர்ந்த சிற்ப கலைஞர் காலியப்ப கவுண்டர்,

5.திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலம்

முதலியோருக்கு பத்மஸ்ரீ விருது இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.