தமிழ்நாடு

செம்மர கடத்தல் : 5 தமிழர்கள் ஆந்திராவில் கைது

செம்மர கடத்தல் : 5 தமிழர்கள் ஆந்திராவில் கைது

webteam

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆந்திர வனத்துறையி‌னர் பக்ராபேட்டை வனப்பகுதியில் ரோந்து சென்ற போது சின்னக்கொட்டி‌கல்லு என்னுமிடத்தில் ‌கார் ஒன்று வேகமாக சென்றுள்ள‌து‌. வ‌னத்துறையினர் தடுத்தும் கார்‌ நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதனை‌யடுத்து காரை து‌ரத்திச் சென்ற வனத்துறையினர், ஷாமலா மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் காரை மடக்கிப் பிடித்தனர். 

காரை பரிசோதனை செய்ததில் செம்மரக்கட்டைகள் இருந்துள்ளன. பின்னர் காரிலிருந்து 5 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை மா‌ட்டத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.