புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் எஸ்பியாக சுகுணாசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக மயில்வாகனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக கண்ணனும், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக பி.விஜயக்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி எஸ்பியாக டி.ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.